கனடா வாழ் தமிழீழ உறவுகளே!
மே 2ல் நாடுகடந்த தமிழீழ அரசிற்கான தேர்தல், புலம் பெய்ர்ந்த மண்ணில் நாம் கட்டி எழுப்பும்
வலுக்கட்டுமானம். சர்வதேசத்தில் இருந்து தமிழீழத்தாயக இருப்பிற்கும் விடுதலைக்குமான
சனநாயகப் பாச்சலுக்கான கட்டுமான. உங்கள் தெரிவுகள் முக்கியம். கனடாவில் தேர்தல் தெரிவிக்குள்ளாகியுள்ள
20 இடங்களுக்கு நாம் 20பேர் இணைந்து உங்கள் ஆதரவை வேண்டிநிற்கின்றோம்.
நாம் இணைந்து ஒற்றுமையாகச் செயற்படுவது அவசியம் என்பதால் தற்பொழுது இணைந்துள்ளோம்.
நாடு கடந்த அரசின் வழிகாட்டிக் கோட்பாடுகள் ஒன்பதிற்கும் அமைய அவற்றை செயற்திட்டங்களாக
மாற்றி இலக்கை அடையக்கூடியவர்களாக இணைந்து உங்கள்முன் தெரிவிற்காக நிற்கின்றோம்
பெண்கள், இளையவர்கள், துறைசார் வல்லுநர்கள், சமூக சேவகர்கள், ஊடகத்துறையினர் என அனைத்து
வலுநிலைகளையும் உள்வாங்கி 20பேர் போட்டியிடுகின்றோம். எம் அனைவருக்கும் உங்கள் பகுதிகளில்
வாக்களிப்பதனால் வலுவானவர்களை ஒற்றுமைப்பட்ட உங்கள் பிரதிநிதிக் குழுவாக உங்களால் தெரிவு
செய்யமுடியும். தாயக, தேசியம், தன்னாட்சி, விட்டுக்கொடுக்காத இறையாண்மை
என்னும் நிலையான தமிழினக் கொள்கைகளை உங்கள்சார்பில் உறுதியாக முன்னெடுப்போம்
என உறுதி கூறுகின்றோம்.
ஈழத்து மக்களுக்காக
பாடு படுபவர்களை மக்கள் இனம் கண்டு வாக்களிக்க வேண்டும்
ஒவ்வொருவரும் 5பேருக்கு வாக்களிக்கலாம் என்பதால் ஒவ்வொருதேர்தல் மாவட்டத்திலும் இணைந்துள்ள
ஐவருக்கும் நீங்கள் வாக்களிக்கலாம்.